Stop 10
கலைகளுக்கு பணம் கொடுக்காதீர்கள்
டேங் டாவூ
Artwork
210.கலைகளுக்கு பணம் கொடுக்காதீர்கள்(0:00)
0:00
0:00
1995-ஆம் ஆண்டு, டேங் டாவூவால் நடத்தப்பட்ட நிகழ்ச்சியிலிருந்து வந்த இந்தக் கலைப்பொருள், “கலைகளுக்கு பணம் கொடுக்காதீர்கள்” என்ற வாசகம் பொறிக்கப்பட்ட மேற்சட்டை ஆகும்.
டாவூ, ஒரு கலைக் கண்காட்சியின் தொடக்கவிழாவின் போது, சிங்கப்பூர்க் குடியரசின் அப்போதைய அதிபரை அணுகினார். அவரிடம் அந்த மேற்சட்டையை அணிய அனுமதி கேட்டதோடு, “நான் ஒரு கலைஞன். நானும் முக்கியமானவன்,” என்று எழுதப்பட்ட கடிதத்தையும் அளித்தார். 1993-ஆம் ஆண்டின் பிரதர் கேன் நிகழ்வுக்குப் பிறகு, செயல்திறன் கலை நிகழ்ச்சிகளுக்கு நிதி வழங்குவதற்கு தடை விதிக்கப்பட்டதன் எதிர்ச்செயலே இந்தப் படைப்பு. ஜோசப் இங்கின் அந்தக் கலைநிகழ்ச்சி, 1990-களில் சிங்கப்பூர் கலை வரலாற்றின் ஒரு முக்கிய தருணத்தை விளக்கிக் காட்டியது.
டாவூ சிங்கப்பூரின் கருத்துருக் கலையின் வளர்ச்சியில் ஒரு முக்கியப் பங்காற்றியவராகக் கருதப்படுகிறார். ஏற்கனவே இருந்த பாரம்பரியக் கலை வடிவங்களுக்கும், வழக்கத்திலிருந்த கலை நடவடிக்கைகளுக்கும் சவால் விட்ட திறமையான கலைஞர்களில் ஒருவர் எனப் புகழப் படுகிறார்.
-min 1.png)
