சென்னின் முதல் கணவர் யூஜின் சென் அவருக்கு மிகவும் பிடித்த மாதிரிகளில் ஒருவராவார். சென் வரைந்த பல உருவப்படங்களில் மிகவும் தனித்துவமான முறையில் இடம்பிடித்த ஒரே நபர் அவர். இந்தப் படைப்புகள் பெரும்பாலும் சிந்தனை மற்றும் ஆழ்ந்த சிந்தனைத் தருணங்களில் யூஜீனைக் காட்டுகின்றன.
உங்களுக்கு முன்னுள்ள யூஜினின் இந்த மூன்று உருவப்படங்கள் 1939-க்கும் மற்றும் 1945-க்கும் இடையில் வரையப்பட்டன. அவை இரண்டாம் உலகப் போரின்போது, சென்னும் யூஜினும் கண்காணிப்பில் வைக்கப்பட்ட காலங்கள். முதலில் ஹாங்காங்கிலும் பின்னர் ஷாங்காயிலும் அவர்கள் வைக்கப்பட்டார்கள். உள்ளேயே அடைத்து வைக்கப்பட்ட சென், இந்தக் காலகட்டத்தில் பல உட்பறக் காட்சிகளை வரைந்தார். இதன் விளைவாக, அவரது படைப்புகள் யூஜினின் உருவப்படங்கள் அல்லது அசைவற்ற வாழ்வு ஓவியங்களில் கவனம் செலுத்தின.
சென் யூஜீனைத் தொடர்ச்சியாக ஒரு வருத்தமான, சிந்தனைமிக்க வெளிப்பாட்டுடன் சித்தரிக்கிறார். இந்த உருவப்படங்களில், யூஜினின் கைகளில் ஒன்று பெரும்பாலும் அவரது நெத்தியிலோ அல்லது அவரது தலையின் ஓரத்திலோ இருப்பதை நீங்கள் கவனிக்கலாம்.
இந்த மாதிரியான சிந்தனை ஒருமுகப்பாட்டைக் குறிப்புணர்த்துவதும், உலர்ந்த தூரிகையடிப்புகள், நீர்த்த வண்ணங்கள் ஆகியவையும் இணைந்து, சன் யாட்-சென்னுக்கு சீனக் குடியரசின் முதல் வெளியுறவு அமைச்சர் என்கிற வகையில், யூஜினின் பொறுப்புணர்வைக் குறிப்பாகக் காட்டுகின்றன. தனது கண்ணாடியையோ அல்லது ஒரு புத்தகத்தையோ கையில் வைத்திருப்பது போன்றே அவர் அடிக்கடி சித்தரிக்கப்படுகிறார், இந்த இரண்டுமே அவரை ஒரு நன்கு படித்த அறிவுஜீவியாக அடையாளப்படுத்துபவையே.
அவர்களது திருமண வாழ்க்கை முழுவதும் சென்னின் கலைப் பயிற்சியை யூஜின் ஆதரித்தார், “அவர் எப்போதும் எனக்காக நிலைக்காட்சி தருவதற்குத் தயாராக இருந்தார். அது எப்போதும் ஒரு கலைஞருக்கு உதவுகிறது,” என சென் ஒருமுறை குறிப்பிட்டார்.
துரதிர்ஷ்டவசமாக, யூஜின் 1944 மே மாதம் காலமானார், போரின் முடிவை அவர் காணவில்லை.