சென், தன் முன்னர் மாதிரியாக அமர்ந்தவர்களை உணர்வுடன் சித்தரிப்பதற்குப் பெயர் போனவர். சென் நியமிக்கப்பட்டு உருவப்படங்கள் வரையும் வேலையை வாழ்வாதாரத்துக்காகச் செய்த போதிலும், தனது நண்பர்கள் மற்றும் தனக்கு நெருக்கமானவர்களின் உருவப்படங்களையும் வரைந்து வந்தார்.
ரோஹானி மற்றும் குடும்ப உருவப்படம் போன்றவை சென் தனிப்பட்ட முறையில் அறிந்தவர்களின் உருவப்படங்களாகும். இடதுபுறத்தில் உள்ள உருவப்படத்தில் இருக்கும் ரோஹானி இஸ்மாயில், நன்யாங் நுண்கலைக் கழகத்தில் சென்னின் மாணவர்களில் ஒருவர்.
மலாய்க் கலைச் சமூகத்தில் சென்னுக்கிருந்த பல நண்பர்களில் இவரும் ஒருவர். சென் மலாய் மொழியில் நன்றாகப் பேசக்கூடியவர். அவர்களுடன் மலாய் மொழியில் பல கடிதங்களைப் பரிமாறிக்கொண்டிருக்கிறார். உங்களுக்குப் பின்னால் உள்ள காட்சிப் பெட்டியில் உள்ள சில பொருள்களின் மூலம், மலாய்க் கலைச் சமூகத்துடன் சென்னுக்கிருந்த தொடர்புகளைப் பற்றி மேலும் அறியலாம்.
உங்களுக்கு முன் நீங்கள் காணும் குடும்ப உருவப்படம், சென்னின் நீண்டகால நண்பர்களை அவர்களின் குடும்பப் பிணைப்புகளைக் கொண்டாடும் ஒரு காட்சியியலில் சித்தரிக்கிறது. உருவப்படத்தின் அங்கங்களான சென் குடும்பத்தினர், ஜார்ஜெட்டின் உறவினர்களல்ல. அவர் பினாங்கில் வசிக்கும்போது, அவர்கள் அவருடைய அண்டை வீட்டாராக இருந்தனர்.
ஒரு பெரிய எண்ணிகையிலான குழுவினரைக் கொண்ட சென்னின் அரிய உருவப்படங்களில் இதுவும் ஒன்றாகும். ஒவ்வொரு குடும்ப உறுப்பினரும் வெவ்வேறு அமர்வுகளில் தனித்தனியாக நிலைத்துக் காண்பித்துள்ளனர், சென் அவர்களின் நிலைகளை இயக்கியிருக்கிறார். மேல் இடதுபுறத்தில் உள்ள தந்தை உருவமான சென் பா ஷின் அவர்களின் உருவம் கடைசியாக வரையப்பட்டது. மாதிரிகளின் சாதாரணமான தன்மை நெருக்கமான மற்றும் வழக்கமான சூழல் ஒன்றை உருவாக்குகிறது.
குடும்பத்தினர் உருவப்படத்தில் வலதுபுறத்தில் உள்ள இளம் பெண்ணின் பெயர் டோரதி சென். அவர் இந்தப் படைப்பு செய்யப்படுவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சென்னின் முந்தைய ஓவியத்திற்காக மாதிரியாக அமர்ந்திருந்தார். சென் டோரதியுடன் குறிப்பிடதக்க வகையிலான நெருங்கிய உறவைக் கொண்டிருந்தார். டோரதி பெரியவராக வளர்ந்தபிறகும், அவர்களிருவரும் அடிக்கடி அன்புக் கடிதங்களைப் பரிமாறிக்கொண்டனர்.