Stop 14
5314

மை ஆ காங்கின் (My Ah Kong) பெரிய வீடு

சுவா சாய் டெக்
Artwork
City Hall Wing, Level 2, DBS Singapore Galleries
Use headphones for a better listening experience and to be considerate to others.
5314.மை ஆ காங்கின் (My Ah Kong) பெரிய வீடு(0:00)
0:00
0:00

எல்லாம் ஒன்றுபோலத் தோன்றத் தொடங்கும் போது, எவ்வகையான சமூகம் உருவாகிறது? சுவா சாய் டெக் (Chua Chye Teck) தனது சிற்ப நிறுவலின் மூலம் இக்கேள்வியை எழுப்புகிறார். பன்னிரண்டு வெள்ளை நிறக் கட்டமைப்புகள் நெருக்கமாக அடுக்கப்பட்டு நிமிர்ந்து நிற்கின்றன. அவற்றின் முகப்புகள், சுவாவின் தந்தையின் தொழிற்சாலையிலிருந்து எடுக்கப்பட்ட பழைய துணி துவைக்கும் பலகைகளால் ஆனவை. அவை சிங்கப்பூரின் பொதுக் குடியிருப்பு வீடுகள், அதாவது வீடமைப்பு வளர்ச்சிக் கழக புளோக்குகளின் வெளிப்புறத்தைப் போலவே காட்சியளிக்கின்றன. இது இன்றைய சிங்கப்பூரில் ஒரு பழகிப்போன காட்சி.

1990-களின் பிற்பகுதியில், சிங்கப்பூர்க் கலைஞர்கள் நிறுவற்கலை, சமூகத் திட்டங்கள், கண்டெடுக்கப்பட்ட பொருள்கள் மற்றும் தங்களைச் சுற்றியுள்ள சூழல் ஆகியவற்றின் பக்கம் திரும்பிக்கொண்டிருந்த நேரத்தில், சுவா இப்படைப்பை உருவாக்கினார். சிற்பக்கலையில் பயிற்சி பெற்று, பின்னர் புகைப்படக் கலைக்கு மாறிய சுவா, சிங்கப்பூரின் மாறிவரும் நிலப்பரப்பைப் பிரதிபலிக்க எளிய பொருள்களைக் கொண்டு பணியாற்றினார். அவர் தனது இந்தப் படைப்பை முதன்முதலில், சைனாடவுனில் உள்ள ஒரு கடை வீட்டில் அமைந்திருந்த, கலைஞர்களால் நடத்தப்படும் ஒரு கலைக்கூடமான 'பிளாஸ்டிக் கைனெடிக் வோர்ம்ஸ்' (Plastique Kinetic Worms) என்ற இடத்தில் காட்சிப்படுத்தினார். சிறிய, சுதந்திரமான கலைக்கூடங்களே இத்தகைய ஆய்வுமுயற்சிகளைச் சாத்தியமாக்கின. 1991-ல், லசால் (laselle) கல்வி நிறுவனத்தின் முன்னாள் மாணவியான சூசான் விக்டர் (Suzann Victor), '5ஆம் கடவுவழி' என்ற அமைப்பை இணைந்து நிறுவினார். பார்க்வே பரேடில் (Parkway Parade) உள்ள ஒரு வணிக வளாகத்தின் நடைவழியைக் கலைக்கான இடமாக மாற்றினார். இந்த மாற்று இடங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருந்தன. அவை பாரம்பரிய அருங்காட்சியகங்களின் வெள்ளைச் சுவர்களைத் தாண்டி, கலைஞர்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்கின.

Transcript