Stop 3
5303

மேவிஸ்

அன்னரத்னம் குணரத்னம்
Artwork
City Hall Wing, Level 2, DBS Singapore Galleries
Use headphones for a better listening experience and to be considerate to others.
5303.மேவிஸ்(0:00)
0:00
0:00

மேவிஸ் (Mavis) சிற்பத்தைப் பாருங்கள். அவரது தலையின் மென்மையான சாய்வு, அவரது ஆடையின் மடிப்புகள்; ஒவ்வொரு நுண்ணிய அம்சமும் முன்பின் அறிந்திருத்தலையும் அக்கறையையும் உணர்த்துகிறது. இச்சிற்பத்தை உருவாக்கிய கலைஞர் அன்னரத்தினம் குணரத்தினம், தனது படைப்பின் பாத்திரத்தை நன்கு அறிந்திருந்தார். அவர் ராஃபிள்ஸ் பெண்கள் பள்ளியில் மேவிஸுடன் இணைந்து கற்பித்தார். மேவிஸின் யூரேசியத் தோற்றமும் அவரது மென்மையான குணமும் அவரைக் கவர்ந்தன; இவ்விரண்டுமே இச்சிற்பத்தில் தெளிவாகப் பிரதிபலிக்கின்றன.

1950-களில் உருவாக்கப்பட்ட இந்த மேவிஸ் சிற்பம், ஒரு வேறுபட்ட, மிகவும் தனிப்பட்ட, இயல்பான உருவப்படக் கலையைப் பிரதிபலிக்கிறது. இது டோரா கோர்டின் (Dora Gordine) போன்ற முந்தைய கலைஞர்களின் படைப்புகளிலிருந்து தனித்து நிற்கிறது. குணரத்தினம் அக்காலத்தில் சிங்கப்பூரின் சில பெண் சிற்பிகளில் ஒருவராக இருந்தார். அவர் முழுநேர ஆசிரியராகப் பணியாற்றினாலும், சிங்கப்பூரின் போருக்குப் பிந்தைய கலைத்துறையில் தீவிரமாக இயங்கி வந்தார். அவர் ஜார்ஜெட் சென் (Georgette Chen) போன்ற ஓவியர்களுடன் இணைந்து சிங்கப்பூர்க் கலைக் கழகத்தில் தொடர்ந்து தனது படைப்புகளைக் காட்சிப்படுத்தினார்.

இது சிங்கப்பூரின் வரலாற்றில் ஒரு திருப்புமுனையான தருணம். சிங்கப்பூர் தன்னை ஒரு தேசமாகக் கற்பனை செய்யத் தொடங்கியிருந்தது. அடையாளம் என்பது இனி வெளியிலிருந்து மட்டும் வரையறுக்கப்படாமல், இந்த இடத்தைத் தங்கள் இல்லமாகக் கருதியவர்களால் வரையறுக்கப்பட்டது. குணரத்தினத்தின் படைப்பு அந்த மாற்றத்தின் ஒரு பகுதியாகும். ஒருவேளை, மேவிஸும் நம்மை இதையே சிந்திக்கத் தூண்டுகிறார்: ஒரு தேசத்தை வடிவமைத்த மக்களை நாம் எப்படி நினைவுகூர்கிறோம்? வரலாற்றுப் புத்தகங்களில் உள்ள புகழ்பெற்ற பெயர்களை மட்டுமல்லாமல், அன்றாடத் தொடர்புகள் மூலம் யாருடைய தாக்கம் உணரப்பட்டதோ, அந்த மக்களை நாம் எப்படி நினைவுகூர்கிறோம்?

Transcript
Artwork details
Artist Name
Annaratnam Gunaratnam
Full Title
Mavis
Time Period
1953
Medium
Bronze
Extent Dimensions (cm)
Dimensions 3D: Object measure: 49 x 37 x 22 cm
Credit Line
Gift of Sadhonadevi Gunaratnam. Collection of National Gallery Singapore.
Geographic Association
Singapore
Accession Number
2017-00952