Stop 4
5304

மீன்பிடி வலைகளைச் சரிசெய்தல்

சென் செங் மேயி
Artwork
City Hall Wing, Level 2, DBS Singapore Galleries
Use headphones for a better listening experience and to be considerate to others.
5304.மீன்பிடி வலைகளைச் சரிசெய்தல்(0:00)
0:00
0:00

உங்களைச் சுற்றியுள்ள படைப்புகளில் காணப்படுவது போன்ற, அழுத்தமான கோடுகள். துடிப்பான நிறங்கள் என சென் செங் மேயின் (Chen Cheng Mei) நிறத் தேர்வு மிகவும் திட்டமிட்டது. ஒத்த கலைஞரான அன்னரத்னம் குணரத்னத்தைப் போலவே, சென் அந்நேரத்தில் சிங்கப்பூரின் கலை உலகில் தீவிரமாகச் செயல்பட்ட சில பெண் கலைஞர்களில் ஒருவராக இருந்தார். தனது குடும்பத்தினரின் ஆதரவினால் அவரால் கலையை ஒரு தொழிலாகத் தொடர முடிந்தது.

சென், புதிய படைப்பூக்கம் தேடி ஒன்றாகப் பயணம் செய்த கலைஞர்களின் குழுவான 'பத்துப்பேர் கலைக் குழு'விலும் உறுப்பினராக இருந்தார். இந்நிலப்பரப்பு முழுவதும் அவர்கள் மேற்கொண்ட பயணங்கள், பல்வேறு பண்பாடுகளையும் மக்களையும் பற்றி அறிந்துகொள்ள அவர்களுக்குக் கண் திறந்தன. சில சமயங்களில், சென் தனியாகவும் பயணம் செய்தார். அவர் இந்நிலப்பரப்புடன் நின்றுவிடவில்லை. அவர் மேலும், ஆப்பிரிக்கா மற்றும் தெற்காசியா வரை சென்றார்; அந்நாடுகள் சிங்கப்பூரைப் போலவே, விடுதலைக்குப் பிறகு காலூன்றிக்கொண்டிருந்தன.

இப்பயணங்கள், சென் தனது கலையை அணுகிய தன்மையையும், நிறங்களைப் பயன்படுத்திய தன்மையையும் வடிவமைத்தன. அவரைப் பொறுத்தவரை, நிறம் என்பது வெறும் காட்சிக்குரியது மட்டுமன்று. அது உணர்வுபூர்வமானது. சென் குழாயிலிருந்து நேரடியாக நிறப்பூச்சைப் பயன்படுத்தியதே இல்லை என்று அவரது ஒத்த ஓவியர் ஒருவர் நினைவு கூர்ந்தார். அதற்குப் பதிலாக, தனது உணர்வை வெளிப்படுத்தும் சரியான நிறத்தைக் கண்டுபிடிக்கும் வரை அவர் நிறங்களைக் கலந்து, அடுக்குகளாகப் பூசுவார்; பெரும்பாலும், அவ்வுணர்வு அவரது பயணங்களில் அவர் கண்டடைந்த மகிழ்ச்சியாகவே இருந்தது.

சென் தனது சில படைப்புகளில் முக விவரங்களைத் தவிர்த்து, அதற்குப் பதிலாக நமது கவனத்தை அவர்களின் ஆடை அல்லது பின்னணிக்குத் திருப்புவதைக் கவனியுங்கள். அவரது ஓவியங்களில் கருவாய் உள்ளவர்கள் வேறு பக்கம் பார்த்துக்கொண்டிருக்கலாம் அல்லது பின்னணியில் ஒதுங்கியிருக்கலாம். சென் சொல்ல வரும் கருத்து என்ன? பார்ப்பதும் அறிவதும் ஒன்றன்று என்பதேயாகும். ஓவியத்தில் கருவாய் உள்ளவருக்கும், பயணிக்கும், இடத்திற்கும் இடையே ஓவியரிடமிருந்து ஓர் இடைவெளி எப்போதும் இருக்கிறது. அடுத்த நிறுத்தத்தில், பார்த்தலின் பொருள் என்ன என்பதைப் பற்றிய இந்த ஆய்வைத் தொடரும் மற்றொரு ஓவியரை நீங்கள் சந்திப்பீர்கள்.

Transcript
Artwork details
Artist Name
Chen Cheng Mei
Full Title
Mending Fishing Nets
Time Period
1960
Medium
Oil on canvas
Extent Dimensions (cm)
Dimensions 2D: Image measure: 72 x 54 cm
Dimensions 3D: Frame measure: 8.5 x 60.5 x 3.3 cm
Credit Line
Anonymous Gift. Collection of National Gallery Singapore.
Geographic Association
Singapore
Accession Number
2008-06715