Stop 5
5305

சோலை

சென் வென் இஹ்சி
Artwork
City Hall Wing, Level 2, DBS Singapore Galleries
Use headphones for a better listening experience and to be considerate to others.
5305.சோலை (0:00)
0:00
0:00

இவ்வோவியத்திற்கு 'சோலை' என்று பெயர். அருகிலுள்ள சுவரில் உள்ள நீண்ட கைக் குரங்குகளைப் பற்றிய பெரிய ஓவியத்தை வரைந்த அதே ஓவியரான சென் வென் ஹ்சிதான் (Chen Wen His) இதையும் வரைந்தார் என்பதை நீங்கள் யூகிக்க மாட்டீர்கள். ஆனால், அவரது நீண்ட கைக் குரங்குகள் நுட்பமான மைத்தீற்றல்களால் வரையப்பட்டிருக்க, 'சோலை' ஓவியம் காட்சியைக் கரடுமுரடான தளங்களாகவும் கோண வடிவங்களாகவும் பிரிக்கிறது. அருகில் சென்று பார்த்தால், பறவைகளைக் குறிக்கும் வெள்ளை நிறத் தீற்றல்களை நீங்கள் காணலாம்; சற்றுப் பின்னால் சென்றால், அக்காட்சி ஒரு நகரும் புதிரைப் போல தன்னை மறுவடிவமைத்துக் கொள்கிறது. இதில் உங்களுக்கு எது தனித்துத் தெரிகிறது?

கனவடிவியல் (Cubist) இயக்கத்தால் ஈர்க்கப்பட்ட சென், ஒரே ஒரு பார்வைக் கோணத்தைக் கைவிடுகிறார். அதற்குப் பதிலாக, அவர் ஒரே நேரத்தில் பல கோணங்களை நமக்குக் காட்டி, அடையாளம் காண முடியாத நிலையின் விளிம்பில் தத்தளிக்கும் வடிவங்களை உருவாக்குகிறார். இவ்வோவியம் ஒரு தெளிவான பொருளை நேரடியாகச் சித்தரிப்பதில் கவனம் செலுத்தவில்லை. இது வடிவங்கள் எவ்வாறு ஒன்றோடொன்று தொடர்பு கொள்கின்றன, ஒன்றுடன் ஒன்று இணைகின்றன மற்றும் இடைவினை புரிகின்றன என்பதற்கான ஓர் ஆய்வாகும்.

Transcript
Artwork details
Artist Name
Chen Wen Hsi
Full Title
Oasis
Time Period
1972
Medium
Oil on board
Extent Dimensions (cm)
Dimensions 2D: Image measure: 209 x 208 cm
Credit Line
Gift of Goldman Sachs & Co. Collection of National Gallery Singapore.
Geographic Association
Singapore
Accession Number
P-0937