இந்தப் படைப்பை இணைந்து உருவாக்கிய விக்டோரியோ சி. இடேட்ஸ், கலோ ஒகாம்போ மற்றும் கார்லோஸ் பிரான்ஸ்கோ ஆகிய மூவரும், பிலிப்பைன்ஸில் 20-ஆம் நூற்றாண்டின் ஆரம்பக் காலக்கட்டத்தில் கலையில் நவீனத்துவத்தை நிலைநாட்டியவர்கள். ஜுவன் நக்பிலுக்கு பணிபுரிந்த பல திட்டங்கள் உள்பட, இவர்கள் மூவரும் பெரிய அளவிலான கலைப்படைப்புகளில் இணைந்தே வேலை செய்திருக்கிறார்கள். கட்டிடக்கலைஞரும், நகரத் தலைவராக இருந்தவருமான நக்பில் இந்த ஓவியப் படைப்பை தன் சொந்த வீட்டில் வைத்துக் கொண்டார்.
இந்த ஓவியத்தில் மையப் பொருளாக இருப்பது ஒரு பப்பாளி மரம். இதன் கிளைகள் நீண்டு படர்ந்து, சிறகுடையவர்களாகவும், அநேகமாக வானத்தவர்களாகவும், காட்டப்பட்டிருப்பவர்களைச் சென்றடைகிறது. அவர்கள், கீழேயிருக்கும் மனித உருவங்களை வழிநடத்துவது போல் சித்தரிக்கப்படுகிறது. படத்தின் தலைப்பு குறிப்பிடுவது போல், அறுவடை தாராளம் போலிருக்கிறது. படத்திலிருக்கும் அனைவரும் அதைச் சேகரிக்கிறார்கள். இடதுபுறத்தில் ஒரு விவசாயி ஓர் எருமையை முன்செல்லத் தூண்டுகிறார். அவருக்குப் பக்கத்தில், ஒரு பெண்மணி முழங்காலிட்டமர்ந்து வெப்ப மண்டலப் பழங்களை அடுக்கி வைக்கிறார். அவர்களுக்கிடையில் வாழைத்தார்களின் பாரம் அழுத்த ஒருவர் குனிந்திருக்கிறார். அபரிமிதமான அறுவடையும், அதைச் செய்யத் தேவையான முதுகு ஒடியும் உழைப்பின் தேவையும் இதில் சித்தரிக்கப்பட்டுள்ளன.
இந்த ஓவியப் படைப்பும், அதில் காணப்படும் சில நவீன விளக்கங்களும் (உதாரணத்திற்கு, சிறகுடையவர்களாக காட்டியிருப்பது), ஆர்ட் நோவியோவின் தாக்கத்தைக் காட்டுகின்றன. அதே சமயம், மரபு ஆடைகளில் நுணுக்கமான வேலைப்பாடுகளும், கலை மற்றும் கைவினைகளும் ஓவியம் முழுவதும் காணப்படுகின்றன. இது போன்ற வேலைப்பாடுகள், திரைச்சீலை போன்ற தோற்றத்தையும், செறிவுள்ள தரத்தையும் உருவாக்குகின்றன. உள்ளூர் சூழலின்
உணர்வை வெளிப்படுத்தும் ஓவியரின் முயற்சியும் இதில் தெளிவாகத் தெரிகிறது.