Stop 5
நடனமாடும் உயிர்கள்
ஹெர்னான்டோ ஆர். ஒகாம்போ
Artwork
305.நடனமாடும் உயிர்கள்(0:00)
0:00
0:00
”இது போன்ற நிகழ்வுகளின் பின்விளைவுகள் எனக்கு திகிலூட்டின. இந்த வெடிப்புகளுக்குப் பிறகு, மீன்கள் மரத்தின் மீது ஏற ஆரம்பித்தன, நிலத்தில் ஊர்ந்து சென்றன ... இந்தச் சந்தர்ப்பங்களில், இது மனிதனை எவ்வாறு தாக்கும், மனித இனத்தில் ஏற்படும் பாதிப்புகள் என்னவாக இருக்கும் என்று நான் கவலைப்பட ஆரம்பித்தேன்.” போரினால் விளைந்த பேரழிவு மற்றும் அணு யுகம் குறித்த ஒரு திரைப்படத்தைப் பார்த்து ஹெர்னான்டோ ஒகாம்போ கூறிய வார்த்தைகள் இவை.
இயற்கை உயிரினங்கள் ஒன்றாகச் சங்கமித்து ஒரு லயத்தோடு வாழ்வதைச் சிவப்பு மற்றும் பச்சை வண்ணங்களில், பிலிப்பைன்ஸ் நாட்டின் விலங்கினங்கள் மற்றும் தாவர இனங்களை நினைவு படுத்துவது போல உயிர்களின் நடனத்தை ஓவியத்தில் காட்டியிருக்கிறார். உள்ளூர் இயற்கையில் இதயத்தைப் பறிகொடுத்து, உயிரின ஓவியங்களை வரையும் போது, அணு யுகத்தில் ஏற்படும் இறுதி அழிபாடுகளையும் மனித இனம் மீது ஏற்படும் தாக்கத்தையும் விளக்கியிருக்கிறார். மனித உருவம் போல் படைக்கப்பட்டவை, ஆடுவது போலவோ சாய்வது போலவோ சித்தரிக்கப்பட்டுள்ளன. ஓவியக் கருப்பொருட்களை விட, படைப்பின் தோற்றத்தையே ஒகாம்போ பெரிதும் முக்கியமாகக் கருதியிருக்கிறார்.
புதிய யதார்த்தவாதிகள் குழுவில் ஒகாம்போ ஒரு முன்னணி உறுப்பினராக இருந்தார். இந்தக் குழுவை, இரண்டாம் உலகப் போர் முடிவடைந்திருந்த சமயத்தில் பிலிப்பைன்ஸில் கலைஞர்கள் ஒன்றுகூடி உருவாக்கினார்கள். 20-ம் நூற்றாண்டின் முதல் பாதியை ஆக்கிரமித்துக் கொண்டிருந்த பழமைவாத, உருவக ஓவியக் கலையிலிருந்து விலகி, புதிய வகையான யதார்த்த நிலையை உருவாக்க முனைந்தது இந்தக் குழு. இதே நேரத்தில், இரண்டாம் உலகப் போரில் பெரிதும் பாதிப்படைந்திருந்த மணிலா நகரம், மறுகட்டமைப்பு, மறுசீராக்கம் மற்றும் நவீனமாக்கல் மூலமாக, தனது புதிய யதார்த்தத்தை அடையாளம் காணத் தொடங்கியது.
Artwork details
Artist Name
Hernando R. Ocampo
Full Title
Dancing Mutants
Time Period
1965
Medium
Oil on canvas
Extent Dimensions (cm)
Dimensions 2D: Image measure: 101.8 x 76 cm
Frame measure: 105.9 x 79.8 cm
Frame measure: 105.9 x 79.8 cm
Credit Line
Collection of National Gallery Singapore
Geographic Association
Philippines
Accession Number
1996-00542