Stop 8
5308

பார்வை 1/86

ஜாஃபர் லத்தீஃப்
Artwork
City Hall Wing, Level 2, DBS Singapore Galleries
Use headphones for a better listening experience and to be considerate to others.
5308.பார்வை 1/86(0:00)
0:00
0:00

ஜாஃபர் லத்தீஃபின் 'பார்வை 1/86' ஒரு தெளிவான தலைப்புப்பொருளை முன்வைக்கவில்லை, அவ்வாறு செய்ய அது முயலவும் இல்லை. இதில், அடர் சிவப்பு, நீலம் மற்றும் மஞ்சள் நிறப் பட்டைகள் ஒன்றுக்கொன்று வளைந்து, ஓவியம் முழுவதும் ஓர் இயக்க உணர்வை உருவாக்குகின்றன. ஜாஃபர் இதை ஒரு பெரிய ஓவியத் தொடரின் பகுதியாக வரைந்தார். இவ்வோவியம், நிறங்கள், தூரிகை நுட்பங்கள் மற்றும் 'பாட்டிக்' கலையால் ஈர்க்கப்பட்ட உத்திகளுடன் ஆய்வு முயற்சிகளைச் செய்வதில் அவருக்கு இருந்த ஆர்வத்தைப் பிரதிபலிக்கிறது. ஜாஃபர் 1960-களில் 'பாட்டிக்' கலையைத் தொடங்கினார், அப்போது அது நுண்கலையாக இல்லாமல், பெரும்பாலும் ஒரு கைவினைக் கலையாகவே கருதப்பட்டது. ஆனால், அவர் அதன் எல்லைகளை விரிவுபடுத்தி, 'பாட்டிக்' கலையை சமகாலக் கலை வெளிப்பாட்டிற்கான ஓர் ஊடகமாக மாற்றியவர்களில் ஒருவராக இருந்தார்.

1970-களுக்குள், அவர் 'அக்ரிலிக்' நிறங்களுக்கு மாறினார். 'பாட்டிக்' முறைக்குப் பொறுமையும் கட்டுப்பாடும் தேவைப்பட்ட நிலையில், அக்ரிலிக் நிறங்கள் ஜாஃபருக்கு வேகத்தையும் சுதந்திரத்தையும் அளித்தன; தூரிகை அவரது மனநிலையைப் பின்பற்ற அவை அனுமதித்தன.

ஜாஃபர் தனது படைப்புகளுக்கு அரிதாகவே தலைப்புகளைக் கொடுத்தார். அதற்குப் பதிலாக, அவர் எண்களையும் தேதிகளையும் பயன்படுத்தினார். ஓர் ஓவியத்திற்குப் பெயரிடுவது, மக்கள் அதை அனுபவிக்கும் விதத்தைக் கட்டுப்படுத்தக்கூடும் என்று அவர் ஒருமுறை கூறினார். எனவே, அவ்வோவியத்தை மீண்டும் ஒருமுறை பாருங்கள். விளக்கமான தலைப்பு இல்லாத நிலையில், அது உங்களுக்கு என்ன சொல்கிறது?

Transcript
Artwork details
Artist Name
Jaafar Latiff
Full Title
Vision 1/86
Time Period
1986
Medium
Acrylic on canvas
Extent Dimensions (cm)
Dimensions 2D: Image measure: 150 x 150 cm
Frame measure: 150.8 x 150.6 cm
Credit Line
Collection of National Gallery Singapore. © Jaafar Latiff family.
Geographic Association
Singapore
Accession Number
P-0954